அகதிகள் முகாமில் வெளி ஆட்கள் நுழைய தடை!

அகதிகள் முகாமில் வெளி ஆட்கள் நுழைய தடை


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நெல்லை மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவால் நெல்லை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பொது இடங்களில் நடமாடுகிறார்களா என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரம் அகதிகள் முகாமில் வெளி ஆட்கள் உள்ளே வர அனுமதி இல்லை என கயிறுகளை கட்டி வாசகங்கள் எழுதி உள்ளனர்.