கொண்டாநகரம் கிறிஸ்தவ ஆலயத்தில் கொரோனா விழிப்புணர்வு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக வழிபாட்டுத் தலங்களில் லைசால் என்ற கிருமி நாசினி மருந்து தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் கிறிஸ்தவ ஆலயத்தில் கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் மருந்து தெளிக்கப்பட்டது.