சிதிலமடைந்து காணப்படும் வஉசி மணிமண்டப நுழைவு வாயிலை சீரமைக்க -முன்னாள் மேயர் புவனேஸ்வரி வலியுறுத்தல்

நெல்லை டவுனில் சிதிலமடைந்து காணப்படும் வஉசி மணிமண்டப நுழைவு வாயிலை சீரமைக்க வேண்டும் மாநகராட்சி ஆணையாளரிடம் முன்னாள் மேயர் புவனேஸ்வரி வலியுறுத்தல்

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி மாநகராட்சி ஆணையாளர் கண்ணனை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தார் அதில் கூறியிருப்பதாவது

நெல்லை டவுன் பொருட்காட்சி மைதானத்தில் உள்ள வஉசி மணி மண்டப நுழைவு வாயில் சிதிலம் அடைந்து உள்ளது எனவே அதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை நகரில் மோசமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். நகரில் சாக்கடைகளை தூர்வாரி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கும் முன்பே கொரோனா வைரஸ் குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை டவுன் பகுதிகளில் அனைத்துப் பகுதிகளிலும் முழுமையாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டு மனித கழிவுகள் தெருக்களில் வராதவாறு தகுந்த நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.