தேனி புதிய பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


தேனி மாவட்டம்  கேரள மாநிலத்தின் அருகில் இருப்பதால் அதி தீவிர கண்காணிப்பில் இருக்கிறது. இந்நிலையில் தேனி அல்லி நகரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நகராட்சி பணியாளர்களுடன்  தேனி புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளுக்கும் இன்று அதிகாலையில் இருந்தே கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


தீவிரமாக பரவும் வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பயணிகளுக்கு வழங்கப் படுகிறது. தேனியில் அனைத்து பொது கழிப்பறைகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.