ஒளிரும் ஈரோடு உருவாக்கும் திட்டத்தில் மலையம்பாளையம் தடுப்பணையை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

ஒளிரும் ஈரோடு உருவாக்கும் திட்டத்தில் நாற்பத்தி இரண்டாவது நீர்நிலை பணி மலையம்பாளையம் தடுப்பணையை சுமார் 2.81 ஏக்கர் பரப்பளவு மற்றும் 5 லட்சம் மதிப்பீட்டில், சுத்தம் செய்து தூர்வாரி ஆழப்படுத்தும் பணியை  மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. வே. போ. சிவசுப்பிரமணியம் எம்.எல்.ஏ.,  ஈரோடு பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு அ. கணேசமூர்த்தி எம்.பி  அவர்களும் துவக்கி வைத்தார்கள். மேலும் இவ்விழாவில் எஸ் ஐ டி பி ஐ வங்கி பொது மேலாளர் திருமதி சித்ரா K. அலை சென்னை,  திரு எம்.பி. எல். கான் துணை பொது மேலாளர் எஸ் ஐடிபிஐ வங்கி ஈரோடு, எம் சின்னசாமி தலைவர்,  திரு எம். சி. ராபின் தலைவர் நீர் மேலாண்மை குழு,  கொடுமுடி  அதிமுக ஒன்றிய செயலாளர்  கொடுமுடி ஒன்றிய கூட்டுறவு சங்கத் தலைவர் கலைமணி, கிளாம்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சி. சுப்பிரமணியம்,  கிளாம்பாடி கூட்டுறவு வங்கி தலைவர் பி.கே. தேவராஜ்,  கிளாம்பாடி கூட்டுறவு வங்கி இயக்குனர் பி.கே. பாலசுப்பிரமணியம்,  கிளாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி ருக்மணி,  கிளாம்பாடி நில வருவாய் ஆய்வாளர் திருமதி தங்கமணி,  கிளாம்பாடி கிராம நிர்வாக அலுவலர்  திருமதி கல்யாணி, மற்றும் கிளாம்பாடி பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் பரப்புரையாளர்கள்,  குழு உதவியாளர்கள்,  மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.