மாஸ்க் அணிந்து திருமணம் நடத்தி வைத்த விஜயகாந்த் - பிரேமலதா!

தேமுதிக மாநில தொழிற் சங்க பேரவை துணை செயலாளர் R. வேணு ராம் அவர்களின் இல்லத் திருமண விழா சென்னை சாலிகிரமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.


இந்த விழாவில் தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே சுதீஷ் மற்றும் பார்த்த சாரதி ஆகியோர் பங்கேற்றனர்.


ஏற்கனவே இந்த திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது 
கொரனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மக்கள் ஒன்று கூடாமல் இருக்க வேண்டியும் மத்திய அரசு சுய ஊரடங்கு உத்தரவு அளித்திருந்த நிலையில் இந்தத் திருமணம் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், மணமக்களின் இரத்த சொந்தங்கள் மட்டும் கலந்து கொண்டு எளிய முறையில் நடைபெற்றது.


இந்த விழாவிற்கு வந்த அனைவருக்கும் முகமூடி மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டது. விஜயகாந்த், பிரேமலதா உள்பட அனைவரும் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர். 


மணமக்கள் - விமல்குமார் - கமலி