சேலத்தில் மக்கள் ஊரடங்கு: வீடுகளில் முடங்கிய மக்கள்!

அரசு ஆணைப்படி  கொரோனோ தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்ததை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அயோத்தியா பட்டிணம் ராமர் கோயில் காரிப்பட்டி மேட்டுப்பட்டி வாழப்பாடி ஆத்தூர் சங்ககிரி மேச்சேரி தாரமங்கலம் அம்மாபேட்டை பொன்னம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அனைத்தும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது


காரணமாக சேலம் மாவட்டம் வாஉசி மார்க்கெட் மற்றும் சுற்றியுள்ள டீக்கடைகள் ஹோட்டல்கள் நட்சத்திர விடுதிகள் அனைத்தும் முழு அடைப்பு ஏற்பட்டுள்ளது  வாழப்பாடி டிஎஸ்பி சூரியமூர்த்தி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் பொது மக்களை கொரோனா வைரஸிலிருந்துகாக்க தடுப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன இதற்கு பொதுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்