வேப்பூர் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த சிறுவனை பாம்பு கடித்ததால் பலியானான்.

 


 

அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன் 5 வயதுள்ள சிறுவன்  வேல்முருகன் , இவன் நேற்று காலை தங்களது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தான், அப்போது அருகிலுள்ள புதருக்குள் இருந்த பாம்பு ஒன்று வேகமாக வந்து சிறுவனின் காலில் கடித்துள்ளது. உடனடியாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தான்,  அதை தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்று முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்   அங்கும் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்டான்,  இது குறித்து வேப்பூர் போலிசார் விசாரித்து  வழக்கு பதிவு செய்தனர்.