வீட்டுக்குள் புகுந்த சாக்கடை நீர் : நோய்த்தொற்று அபாயம்

 


பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டு பகுதியில் பாலம் உடைந்து சாக்கடை நீர் வீட்டுக்குள் புகுந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன இதில் எட்டாவது வார்டு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள இந்த பகுதி மக்கள் கடந்து செல்வதற்கு சாலையின் குறுக்கே மூன்று  பாலங்கள் உள்ளது இந்நிலையில் பாலம் சிதிலமடைந்தல்  மராமத்து பணிக்காக பாலம் இடிக்கப்பட்ட நிலையில். அந்த பகுதிபொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அனைத்தும் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே செல்ல வழியில்லாமல் குடியிருக்கும் வீடுக்குள்  புகுந்து சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதுகுறித்து பல்வேறு முறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதி மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கழிவுநீர் வாய்க்கால் மற்றும் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை சரி செய்து குடியிருப்பு பகுதிக்குள் தேங்கிநிற்கும் கழிவுநீரைவெளியேற்றி அந்தப் பகுதி மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் அந்த பகுதியில் 10 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்குவதாகும் முறையாக குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் இதுகுறித்து பேரூராட்சி அலுவலரிடம் கேட்டபோது குடியிருப்பு பகுதிக்கு குடியிருப்பு பகுதிக்கு செல்லுகின்ற சாலையின் குறுக்கே பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது ஒரு சில நாட்களில் தேங்கிநிற்கும் சாக்கடை நீரை குடியிருப்புப் பகுதியில் இருந்து வெளியேற்றி அதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள இருப்பதாகவும் சாக்கடை நீர் செல்வதற்கு வழியில்லாமல் உள்ளது இத்தோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கழிவுநீர் வாய்க்கால் சரி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்