திட்டக்குடி எம்.எல்.ஏ., கணேசன் மருத்துவமனையில் ஆலோசனை

 


திட்டக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் திமுக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சி.வெ கணேசன் எம்எல்ஏ  கொரோனா வைரஸ் பரவமால்  தடுப்பு நடவடிக்கைக்காக மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை மருத்துவர் கலைச்செல்வி சந்தித்து கலந்து ஆலோசித்தார்.


 அப்பொழுது மருத்துவமனையில் உள்ள  நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும்  தேவைப்பட்டால் மருத்துவ மனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் விரைவாக வாங்கி தருவதாகவும் உறுதியளித்தார். 


உடன் மங்களுர் தெற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன்,  விவசாய அணி துணை அமைப்பாளர் திருவள்ளுவன், தகவல் தொழில்நுட்ப அணி திட்டக்குடி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.