துணைநிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக எந்தவித உத்தரவிடவுடம் அதிகாரம் இல்லை -நாராயணசாமி பேட்டி

அமைச்சரவை பரிந்துரையை மீறி துணைநிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக எந்தவித உத்தரவிடவுடம் அதிகாரம் இல்லை என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதை சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளதால் தீர்ப்பை மதித்து ஆளுநர் கிரண்பேடி செயல்பட வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


அதிகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பிறப்பித்த தீர்ப்பு தொடர்பாக மாநில முதலமைச்சர்  நாராயணசாமி இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,  
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அதிகாரம் பெற்றவர்கள் மக்கள் பிரதிநிதிகள் தான் என்றும் வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறியுள்ளதாகவும் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கவோ குறைக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றுகின்ற அனைத்து அதிகாரங்களுக்கும், அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்று நடக்க வேண்டும் என கூறியுள்ளதாகவும், அமைச்சரவை அனுப்பும் கோப்பிற்கு துனை நிலை ஆளுநர் தனக்கு ஏதேனும் சந்தோகம் இருந்தால் அதை சம்பந்தப்பட்ட செயலர் மூலம் முதலமைச்சரின் கருத்தை கேட்டுத்தான் அதை செயல்படுத்த வேண்டும் எனவும் மேலும் அமைச்சரவை பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதை நிராகரிக்க அதிகாரம் இல்லை என்றும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாம். மேலும் அமைச்சரவை பரிந்துரைத்த முடிவை மறுத்து ஆளுநர் அதிகாரிகளுக்கு எந்தவித மாற்று உத்தரவையும் இட முடியாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் இதன் மூலம் துணை நிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு எந்தவித உத்தரவிடவும் அதிகாரம் இல்லை என்பதை உயர் நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது என தெரிவித்த நாராயணசாமி, இந்திய அரசியலமைப்பு சட்டப்படித்தான் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பதையும், மாநில அரசு இயற்றும் சட்டம் எந்த நோக்கத்திற்காக  இயற்றப்பட்டது என்பதை மத்திய அரசு பார்க்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும் ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதை நேற்று வெளியான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு உறுதிசெய்துள்ளது ஆகவே தீப்பை மதித்து ஆளுநர் செயல்படுவார் என நம்புவதாக முதலமைச்சர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார்.


ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு குறித்து முதல்வரிடம் கேட்டதற்கு ரஜினிகாந்த் முதலமைச்சர் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து இதில் தான் கருத்து சொல்ல விரும்பவில்லை நாராயணசாமி தெரிவித்துள்ளார்.