பாவூர்சத்திரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


பாவூர்சத்திரம் அருகே சடையப்பபுரம் நடுத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் விவசாயி. இவரது மகள் பேச்சியம்மாள் (வயது 23) பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டு வேலை பார்க்க சொல்லி வீட்டில் உள்ளவர்கள் திட்டியுள்ளனர் . இதனால் மனமுடைந்த பேச்சியம்மாள் கடந்த 7ஆம் தேதி விஷமருந்தி ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பேச்சியம்மாள்  இறந்தார் இதுகுறித்து பாவூர் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.