பழனியில் கலெக்டர் ஆய்வு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

பழனியில் கொரோனோ வைரஸ் பாதிக்காத வகையில் பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணம் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பழனி பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், அரசு மருத்துவமனை, மற்றும் திருக்கோயில் நாதஸ்வர பள்ளிஉள்ளிட்ட பல்வேறு இடங்களை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் சார் ஆட்சியர் உமா, தலைமையில் பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர்

விவேகானந்தன், நகர ஆய்வாளர் செந்தில்குமார்,, வட்டாச்சியர் பழனிச்சாமி,, நகராட்சி ஆணையர், லெட்சுமனன்,, அரசு மருத்துவமனை தலைமை அதிகாரி உதயகுமார், தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி கமலக்கண்ணன் திருக்கோயில் செயல்அலுவலர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.


மேலும் வைரஸ் பாதிக்காத வண்ணம் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றனர்