கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: அமைச்சர் செங்கோட்டையனுக்கு கோபி பொதுமக்கள் பாராட்டு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 144 ஊரடங்கு  அமல்படுத்தியதை தொடர்ந்து தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன்  சாலையோரம் தங்கியிருந்தவர்களை, கோபி வேங்கையம்மாள்  பள்ளியில் தங்க வைத்து சுகாதாரமாக மூன்று வேலையும் உணவளிக்க சிறந்த ஏற்பாட்டினை செய்து பொதுமக்களுக்கு  சேவையாற்றிக் கொண்டு இருக்கிறார். 
மேலும் மருத்துவர்கள்  மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 15,000 முகக்கவசம் மற்றும் தேவையான உபகரணங்களை உடனடியாக தருவித்து வழங்கியுள்ளார்.
அனைத்துப் பகுதிகளிலும்  லாரிகள் மூலமே கிருமிநாசினி தெளிக்க 
பெருமளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து லக்கம்பட்டி பேரூராட்சி, நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையம் , நம்பியூர் பேரூராட்சி, நம்பியூர் யூனியன் அலுவலகம், எலத்தூர் பேரூராட்சி ஆகிய அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஆய்வுகள்  மேற்கொண்டு அங்குள்ள ஊழியர்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், வட்டாட்சியர் வெங்கடேஷ், நம்பியூர் ஒன்றிய கழக  செயலாளர் தம்பி சுப்பிரமணியம்,    வட்டார வளர்ச்சி அலுவலர் பாவேசு, நம்பியூர் பேரூர் கழக செயலாளர் கருப்பண்ண கவுண்டர்,  எலத்தூர் பேரூராட்சி செயலாளர் சேரன் சரவணன் மற்றும் பலர் உள்ளனர்.
 முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது...
தினமும் தமிழக முதலமைச்சர் காணொளி மூலம் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு மக்களுடைய அத்தியாவசியமான பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை செய்து வருகிறார் எனவும்,வயதானவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மருந்து மற்றும் நிவாரண உதவிகள் வழங்க அந்தந்த மாவட்ட அலுவலகத்தில் இருந்து உதவி மையம் உள்ளது மாவட்ட அமைச்சர்களை தொடர்பு கொண்டாலும் தேவைப்பட்டால் அந்த இடத்தில் நேரடியாகச் சென்று தேவையான உதவிகள் வழங்கவழங்க தயாராக உள்ளோம் எனவும் கூறினார்.