மனிதநேய சேவையில் மக்கள் நீதி மய்யம்: ஜி.எல்.எம்.சிவக்குமார் தலைமையில் உணவு, மளிகைப்பொருட்கள் வழங்கல்

ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒன்றியம் பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள வயதான ஏழை  எளியோர் குடும்பங்களுக்கு முககவசம் உள்பட  ரூபாய் 30,000 மதிப்பிலான அரிசி, பருப்பு, சேமியா, சர்க்கரை, எண்ணெய், வரமிளகாய், புளி, உப்பு, சோப்பு போன்ற மளிகை பொருட்களை 60 பேருக்கு மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் மய்யத்தினர் வழங்கினார்.


 


இந்நிகழ்வில் கோபி நகர செயலாளர் ஜி சி சிவக்குமார் கோபி ஒன்றிய செயலாளர் என் கே பிரகாஷ் மாவட்ட நற்பணி இயக்கம் அணி செயலாளர் ஜி ஆர் பி கார்த்திகேயன் மாவட்ட மகளிர் அணி சுதா செல்வராஜ் கோபி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பு என் கே சக்தி சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு நா முத்துக்குமார் கோபி ஒன்றியம் குப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்