தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் -ஊராட்சி கவுன்சிலர் கே.என்.டி சங்கர் வழங்கினார்
ம.பொடையூர் ஊராட்சி கவுன்சிலர் கே.என்.டி சங்கர் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.பொடையூர் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் ம.பொடையூர் ஊராட்சியில் பரவல் தடுக்க துப்புரவு பணியாளர்கள் முழு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பாதுகாப்பு கருதியும் வறுமையைப் போக்கும் விதத்தில் திமுக மங்களூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கவுன்சிலருமான கே என் டி சுகுணா சங்கர் தலைமையில் துப்புரவு பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை ,அரிசி, காய்கறிகள், மளிகைபொருட்கள் ,ஊக்கத்தொகை மற்றும் அத்தியவசிய பொருட்கள் வழங்கினார். பின்னர் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் கவுன்சிலர் கே.என்.டி சுகுணா சங்கர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இதில் ஆலம்பாடி கவுன்சிலர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர் லதா சரவணன் ,செயலாளர் மதிவாணன் ,முருகன்,சின் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.