கோபியில் அம்மா உணவகத்தில் காலை, மதியம் இலவச உணவு; அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதியில்  கொரோனா வைரஸ் நோய் தடுப்பின் தொடர்ச்சியாக கோபியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் இன்று முதல் காலை மற்றும் மதியம் இரண்டு  வேளைக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தையும்,  கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.500க்கு 19 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

 


 

இதில் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன்,ஆவின் தலைவர் காளியப்பன், முன்னாள் எம். பி. சாத்தியபாமா,   கோட்டாட்சியர் ஜெயராமன், நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி,தாசில்தார் சிவசங்கர்,சொசைட்டி தலைவர் காளியப்பன், முன்னாள் சேர்மன் கந்தவேல் முருகன்உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

 

  

Previous Post Next Post