அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10ஆயிரம் நிவாரண நிதி: இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வலியுறுத்தல்




ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் பட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 10 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இதனை இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. கடந்த மார்ச்  24-ந் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 14-ந் தேதியுடன் முடிவடையவுள்ளது. ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கானொலி காட்சி மூலம் இன்று(11.4.2020) ஆலோசனை நடத்தியுள்ளார்.  அப்போது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது. அவ்வாறு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் பட்டால், அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வழங்கப்பட்டுள்ள அனுமதி நீடிக்குமா? அல்லது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் பட்டால், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண தொகையை ரூ. 10 ஆயிரத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் வலியுறுத்தியுள்ளார். 


 

 



 

Previous Post Next Post