’ஆப்’ பாட்டில் சரக்கு1000 ரூபாயாம்.. திருட்டுத்தனமாக விற்றவரை அலேக்காக தூக்கிய பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும்  மது கடைகள் தமிழகம் முழுவதும் அடைக்கப் பட்டுள்ளன.திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பதை தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் நெல்லை வண்ணாரபேட்டை வடக்கு பைபாஸ் சாலையில்  ரோந்து சென்ற பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோம சுந்தரம் அப்பகுதியில் மறைவிடத்தில் வைத்து மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சுரேஷ் (வயது 39) என்பவரை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து 42 மதுபாட்டில்கள் கைப்பற்றினார். 


அவரிடம் விசாரித்ததில் மதுக்கடைகள் பூட்டப்பட்டு 20 நாட்களாகிய நிலையில் குவார்ட்டர் ரூ.500 முதல் 1000 வரை விற்பனை செய்து உள்ளனர். வண்ணாரப்பேட்டை பகுதியில் நின்று ரகசியமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை அலேக்காக தூக்கி மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார்.


தொடர்ந்து போலீசார் சுரேசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.