சென்னையில் கால்பரப்பும் கொரோனா: ஒரே நாளில் 103 பேருக்கு பாதிப்பு.. தமிழகத்தில் இன்று 121 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று தமிழகத்தில் மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்து உள்ளது.


இதில் சென்னையில் 103 பேர், செங்கல்பட்டில் 12 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர், நாமக்கல் 2 பேர், காஞ்சிபுரம் ஒருவர் ஆவர். 


சென்னை மேலும் அதிகளவில் பாதிப்பு உள்ள பகுதியாக மாறி வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகளவில் பாதிப்பு உள்ளது. சென்னையில் தொற்று ஏற்ப்பட்டவர்களில் 12 பேர் முதல்நிலை தொற்று ஏற்பட்டவர்கள் ஆவர்.


சென்னையில் ராயபுரம், திருவிக நகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட ஆறு மண்டலங்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாக உள்ளது. 


தமிழக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் சென்னைக்காரர்கள். 


இதுவரை 1,128 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்த 69 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டதால் அந்த மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது.


முன்னதாகவே கிருஷ்ணகிரி கொரோனா இல்லாத மாவட்டமாக உள்ளது.


இதுவரை தமிழகத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.