பொதுமக்களுக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் முட்டைகள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபி நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் ஈரோடு முட்டை கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 65000முட்டைகள் வழங்க பட்டது. மேலும் எஸ். கே. எம். சார்பிலும் ஈரோடு மாவட்டத்திற்கு 50000முட்டைகள் வழங்கப்பட்டன. இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், முன்னாள் சேர்மன் கந்தவேல் முருகன், சொசைட்டி தலைவர் காளியப்பன்,  என். இ. இ. சி. சேர்மன் வி. பி. சண்முகம், ஈரோடு முட்டை கோழிப்பண்ணையாளர் நல சங்கத்தின் தலைவர் கேசவமூர்த்தி, செயலாளர் டி. சசிகுமார், துணை செயலாளர் வனயோகி தேவா, நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, வாசு, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.