17 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பெற்றுத்தந்த சேவாபாரதி

சேவா பாரதியின் திருப்பூர் மாவட்ட தலைவர் டி.ஆர்.விஜயகுமார் அறிக்கை:

 

நமது சேவாபாரதி திருப்பூர் அமைப்பின் சார்பில்  பல்வேறு வகையிலான கொரோனா நிவாரணப்பணிகள் தன்னார்வலர்களின் சீரிய பங்களிப்பினால் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.


அதன் தொடர்ச்சியாக இன்று (16.04.2020 - வியாழக்கிழமை) ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர், ஒளிவிளக்கு நகரில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் குடும்ப அட்டையில்லாத சுமார் 17 குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் வருமானம் தடைப்பட்டதால் உணவு - அத்தியாவசியப் பொருட்களின்றி மிகவும் சிரமப்படுட்டனர். அக்குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் செந்தில்ராஜ் நமது சேவாபாரதி முகாம் அலுவலகத்தை தொடர்புகொண்டு தகவல் கூறினார். இதுவரை அரசிடமிருந்து எந்தவொரு நிவாரணப்பொருட்களும் வரவில்லையென்றும், அதிகாரிகள் மற்றும் வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ உதவிக்கு வரவில்லையென்றும் கூறினார். உடனடியாக நமது சேவாபாரதி பொறுப்பாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை தொடர்புகொண்டு தகவல் சொன்னதன்பேரில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் ஊத்துக்குளி வட்டாட்சியர் மூலம் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் இன்று அங்கு சென்று பார்வையிட்ட அதிகாரிகள் அருகிலுள்ள ரேசன் கடைகளிலிருந்து அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை மைதா மாவு, கோதுமை மாவு, தக்காளி உள்ளிட்ட பொருட்களை வருவாய் கோட்டாட்சியர் & வட்டாட்சியர் முன்னிலையில் நமது தன்னார்வலர்களின் உதவியுடன் வழங்கப்பட்டது. 


 

மேலும் சேவாபாரதி அமைப்பின் சார்பிலும் பல்வேறு வகையான நிவாரணப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன. 

 

உரிய நேரத்தில் நமது சேவாபாரதி நிவாரண முகாம் அலுவலகத்தை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்த சகோதரர் செந்தில்ராஜ் மற்றும் நமது கோரிக்கைமீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கும், நேரடியாக சென்று நிவாரணப்பொருட்களை வழங்கிய வருவாய் கோட்டாட்சியர் & ஊத்துக்குளி வட்டாட்சியர் ஆகியோர்களுக்கு சேவாபாரதியின் சார்பில் மனமார்ந்த மகிழ்ச்சியினை தெரிவித்துக்கொள்கிறோம்.