195 மாற்றுதிறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பிஸ்கட் தொகுப்பு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேக்களுர் ஊராட்சியில் உள்ள கௌசானல் சமூக மறுவாழ்வு மேம்பாட்டு இல்லத்தில் உள்ள 60 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பிஸ்கட், சாக்லேட், கூல்டிரிங்ஸ் அடங்கிய தொகுப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி நேற்று நேரில் சென்று வழங்கினார்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப் பாட்டில், லிட்டில் ஹார்ட்ஸ் சொசைட்டி, 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லத்தில் உள்ள 50 இல்ல வாசிகள், புனித அமலராக்கினி மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லத்தில் உள்ள 50 இல்ல வாசிகள், க்யூர் பெண்கள் மனநல காப்பகம் மற்றும் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி நிறுவனமான கௌசானல் சமுக மறுவாழ்வு மேம்பாட்டு இல்லத்தில் உள்ள 60 இல்ல வாசிகள், அரசு தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லத்தில் உள்ள 35 இல்ல வாசிகள், ஆகமொத்தம் 195 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டோர் தொழுநோய் பாதிக்கப்பட்டோர் மனவளர்ச்சி குன்றியோர் வசித்து வருகிறார்கள்.
தமிழக முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின்படி மேற்கண்ட இல்லங்களில் வசிக்கும் 195 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் ஆரோக்கியமான பிஸ்கட், சாக்லேட், கூல்டிரிங்ஸ் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இதன்படி, மாவட்ட ஆட்சியர் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேக்களுர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் பெண்கள் மனநல காப்பகம் மற்றும் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி நிறுவனமான கௌசானல் சமுக மறுவாழ்வு மேம்பாட்டு இல்லத்தில் உள்ள 60 மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கண்ட ஆவின் தொகுப்பு மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் நேரில் சென்று வழங்கப்பட்டது.