துப்புரவு தொழிலாளர்களுக்கு 2,70,000 மதிப்பில் 15,000 முக கவசம், 2,000 கிருமிநாசினி: முன்னாள் மேயர் க.செல்வராஜ் வழங்கினார்

தமிழ்நாட்டில் “கோவிட்-19” என்ற கொரோனா கொடுந்தொற்று நோயின் பாதிப்பு
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்கள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள சுகாதார உட்கட்டமைப்பு  இந்தக்
கொடிய நோய்த் தொற்றைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்கிறதா என்ற கவலை
மக்கள் மத்தியில்  ஏற்பட்டிருக்கிறது.


மற்ற எல்லாவற்றையும் விட, மக்களைப்
பாதுகாக்கும் பணியே தலையாய பணி என்று  எப்போதும் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் தி.மு.கழகத்தின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின்
அன்பு வேண்டுகோளுக்கு இனங்க திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின்
சார்பில் கொரானா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க திருப்பூர்
மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 2,70,000
மதிப்பில் 15,000 முக கவசம், 2,000 கிருமிநாசினி பாட்டில்களை மாநகராட்சி
ஆணையாளர் க.சிவகுமார்யிடம், மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் மேயர்
க.செல்வராஜ் வழங்கினார்.


இதில் வேலம்பாளையம் மண்டல உதவி ஆணையாளர்
பி.வாசு, மாநகர கழகப் பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், செ.திலகராஜ்,
மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.சேகர், மாநகர அவைத்தலைவர் க.ஈஸ்வரமூர்த்தி,
வேலம்பாளையம் பகுதி பொறுப்பாளர் கொ.ராமதாஸ், மாவட்ட மாணவர் அணி
அமைப்பாளர் திருப்பூர் கோ.ஆனந்தன், துணை அமைப்பாளர் அண்ணா நகர்
அ.ராமசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முரசொலி
க.பழனியப்பன், சுகாதார அலுவலர்கள் எஸ்.முருகன், என்.ராஜேந்திரன் உட்பட
பலர் உள்ளனர்.


 

Previous Post Next Post