தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் 2000 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பருப்பு: அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 2000 நபர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஏற்பாட்டில் 10 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.


நிகழ்ச்சியில் செய்தி மற்றும்
விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் 2000 தூய்மை பணியாளர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு ஆகியவற்றை வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண தொகை தலா ரூ.1000 வழங்க வேண்டும் என உத்தரவுயிட்ட நிலையில்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 185மூன்றாம் பாலினத்தவர்களுக்கு
கொரோனா நிவாரண தொகை தலா ரூ.1000 வழங்கி பணிகளை துவக்கி வைத்தார்.


மேலும் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் 25 கிலோ மூடை அரிசி 50 எண்ணிக்கைகள் மொத்தம் 1250 கிலோ மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான படுக்கைகள் வாங்குவதற்கு ஏதுவாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையினை ஸ்பிக் நிறுவனத்தின் இயக்குநர் ராமகிருஷ்ணன் அவர்கள்
அமைச்சரிடம் வழங்கினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.