திருப்பூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 21 பேருக்கு கொரோனா வரல.. 14 நாட்களுக்கு பிறகு வீடு திரும்புகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் அரசு மருத்துவமனையில், தனியார் மாநாட்டில் கலந்து கொண்ட 21 நபர்கள் கடந்த 14 நாட்களாக மருத்துவமனை கண்காணிப்பில் இருந்து வந்தனர். இந்நாட்களில் மருத்துவர்களால் 2 முறை அவர்களுக்கு கொரோனா தொற்று நோய் பரிசோதனை மேற்கொண்டதில் அந்நோய் அவர்களுக்கு இல்லை என்பதை மருத்துவர்களால் உறுதிபடுத்தப்பட்டதன் அடிப்படையில் கல்லூரி முதல்வர் மரு.வள்ளி அவர்கள் 21 நபர்களுக்கும் கொரோனா நோய் தொற்று குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுறைகள் வழங்கியதோடு மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த 21 நபர்களும் அவர்களது சொந்த வீட்டிற்கு இன்று (18.04.2020) அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மேற்குறிப்பிட்ட நபர்கள் இன்னும் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சாகுல்ஹமீது  உடனிருந்தார். இந்த தகவலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.