கொரோனா மருத்துவ உதவிக்காக தனியரசு எம்எல்ஏ 25 லட்சம் நிதி ஒதுக்கீடு

 


உலகையே இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோய் இந்தியாவிலும் வெகு வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா நோய் தோற்று பரவாமல் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை தந்திடவும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அரசு மருத்துவமனை,
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையம், 
கம்பளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், 
முத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், குள்ளம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், 
பாப்பினி ஆரம்ப சுகாதார நிலையம், 
நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம், 
சாவடிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், 
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சோர்த்து ரூபாய் 25 லட்சம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விடுவிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளார்


Previous Post Next Post