நாகதேவன்பாளையம் ஊராட்சியில் கொமதேக சார்பில் 264 மரக்கன்றுகள் நட்டு தீரன் சின்னமலை பிறந்தநாள் கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகதேவன் பாளையம் ஊராட்சியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின்  264வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.


கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் சிவராஜ் தலைமையில் , 11வார்டு மாவட்ட கவுன்சிலர் சிவகாமி தங்கவேல், ஈரோடு வடக்கு மாவட்ட தி. மு. க. பொருளாளர் கோரக்காட்டூர் கே. ரவீந்திரன்,  ஊராட்சி மன்ற தலைவர் செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி முழுவதும் ஐந்து வகையான 264 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.


இதில் ஈரோடு மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர்கள். சித்தேஸ்வரன், அகிலாண்டீஸ்வரி,  கொ. ம. தே., கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வர மூர்த்தி,  ஒன்றிய செயலாளர் தங்கவேல், மத்திய ஒன்றிய செயலாளர் ராமர், மாவட்ட இளைஞர் அணி வினோத் குமார், கோபி ஒன்றிய தி மு க துணை செயலாளர் நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர் .