மது போதைக்கு வார்னிஷ் குடித்த 3 பேர் பலி

செங்கல்பட்டு இரயில்வே குடியிருப்பில் 3 வாலிபர்கள் பலியாகினர்  குடியிருந்த வாலிபர்கள் மதுபோதைக்காக வார்னீஷ் குடித்ததால் இந்த விபரீதம் ஏற்ப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு இரயில்வே குடியிருப்பில் உள்ள சிவராமன்,பிரதீப் மற்றும் சிவசங்கரன் ஆகிய 3 பேர்  நேற்று இரவு போதைக்காக வீட்டுகளில் கதவு மற்றும் கட்டில் ஆகியவற்றிக்காக பயன்படுத்தப்படும் வார்னீஷை அருந்தியுள்ளனர்.இதில் உடல் நிலை  பாதிக்கப்பட்டு  மயக்கமடைந்த நிலையில் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். இதில்நேற்று இரவே சிவசங்கரன் சிகிச்சை பலனின்றி உயிழிந்த நிலையில்,இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவராமன் மற்றும் பிரதீப் அகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இறந்து போன சிவராமன் மற்றும் சிவசங்கரன் ஆகியோர் இரயில்வே கேட் கீப்பராக பணிபுரிகின்றனர்.பிரதீப் என்பவரின் தாயார் ஆராய் அவர்கள் இரயில்வே ஊழியராக பணிபுரிகிறார்.


இதுகுறித்துசெங்கல்பட்டு நகர மற்றும் இரயில்வே காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..