3000 குடும்பங்களுக்கு இலவசமாக காய்கறி, பழங்கள்: தமுமுகவினர் வழங்கினர்

3000 குடும்பங்களுக்கு இலவசமாக காய்கறி மற்றும் பழங்களை வழங்கிய கோம்பை தோட்டம் கிளை தமுமுகவினர்.


திருப்பூர்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர் 


16/04/2020 இன்று தமுமுக கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 3000 குடும்பங்களுக்கு ஒருவாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை திருப்பூர் பகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று வினியோகம் செய்தனர் 


நிகழ்வில் தமுமுக கோம்பை தோட்டம் கிளை துணை தலைவர் சையது,
மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் ஹனி  அபுதாகிர், 
பஷீர்,  தமுமுக மாவட்ட தலைவர் நசீர்,  மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலி  உள்பட பலர் கலந்து கொண்டனர்