விநாயகர் பவுண்டேசன் சார்பில் 350 குடும்பங்களுக்கு மளிகை: வேதாசலம் வழங்கினார்

கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு  நடவடிக்கையான, தமிழக அரசின் 144 தடை உத்தரவு க்குப்பின்,   திருப்பூர்,   12-ஆவது வார்டு, சாமுண்டிபுரம் நமது எம் ஜி ஆர் நகர், விநாயகர் பவுண்டேஷன் சார்பில்,  ஏழை எளிய மக்களுக்கு  ஏழாவது முறையாக  மொத்தம் 350 குடும்பங்களுக்கு  மளிகை பொருட்கள் அரிசி 5.கிலோ+24 பொருட்கள்(எண்ணெய் பருப்பு மற்ற அனைத்து பொருட்களும்) ஆர்.வேதாசலம் வழங்கினார்.


தனி மனிதன் இடைவெளி கடைபிடிக்க ஒரு நாளைக்கு 50 வீதம் பேர் 350 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.


 எம்ஜிஆர் நகர் மகாசக்தி நகர் பிரியா பள்ளிக்கூடம் வீதி கருப்புராயன் கோவில் வீதி திருமூர்த்தி நகர், ராஜிவ் நகர், பாலமுருகன் நகர் பொது மக்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு 750 ரூபாய் மதிப்புமளிகை சாமான்களை இலவசமாக வழங்கப்பட்டது.


  இந்நிகழ்ச்சியில் நமது எம்ஜிஆர் நகர் பகுதியைச் அவர்கள் மற்றும் சேர்ந்த   ஆர் சக்திவேல்  ரவி, வெங்கடேஷ், பிரகாஷ், மணிகண்டன், பாண்டியன், வெற்றிலை, நடராஜ், ராமகிருஷ்ணன், பொன் பழனிச்சாமி , ஆனந்த், ராம்குமார், வெங்கடேஷ், ராமு, ரத்தனம், ஓ எம் செல்வராஜ்  மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.


இந்த மளிகை பொருட்கள் அனைத்தும் நமது விநாயக பவுண்டேஷன் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது