தமிழகத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா:தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1520 ஆனது

தமிழகத்தில் நேற்று 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 1477 பேருக்கு கொரோனா இருந்தது.


இந்த நிலையில் இன்றைய நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.


இதில், இன்று 43 பேர் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1520 ஆனது சென்னையில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. 


இதுவரை 457 பேர் குணமடைந்து உள்ளனர். 1,043 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


சென்னையில் இன்று 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது.


இன்று திருச்சி மற்றும் தென்காசியில் தலா 4 பேர், விழுப்புரத்தில் 3 பேர், அரியலூர், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூரில்  தலா 2 பேர், நாகை, பெரம்பலூர், சிவகங்கை, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டையில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா இல்லை.


முதல்நிலைப்பணியாளர்களின் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுத்துள்ளது.