தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு தொற்று

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: 


கொரோனா நோய் பாதிப்பு 1323 ஆக இருந்து வந்த நிலையில், இன்று  49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 28 பேர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கL ஆவர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372 ஆனது. இன்று இதுவரை 85 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், இதுவரை 365 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை 35,036 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இறப்பு விகிதம் 1.06 சதவீதம் ஆகும்.


ரேபிட் டெஸ்ட் கிட் என்பது கொரோனா இருக்கிறதா என்பதை அடையாளப்படுத்த செய்யப்படும் சோதனை ஆகும். 


கொரோனா இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது.