கோபி போலீஸ், ஓவியர் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம்

ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் அறிவுறுத்தலின் படி, கோபி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல்  ஆலோசனையின் பேரில் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையில் கோபி தமிழ் நாடு ஓவியர் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை பொது மக்களின் விழிப்புணர்விற்காக கொடூர கொரோனாவை விரட்டும் பணியில் என்ற ஓவியத்தை ஈரோடு, சத்தி, திருப்பூர் ஆகிய சாலைகளை இணைக்கும் மும்முனை  சாலையில் வரையப்பட்ட ஓவியம் ஊரடங்கு உத்தரவை மீறி வருவோர்க்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளதை சுட்டி காட்டுகிறது.