ஊரடங்கை மீறிய 507 பேர் மீது வழக்குப்பதிவு: 286 வாகனங்கள் பறிமுதல்

நெல்லை மாநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை (10 ந்தேதி) இதுவரை  144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 599 நபர்கள் மீது 507 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இன்று மட்டும் நெல்லை மாவட்டத்தில் இதுவரை  144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 47 நபர்கள் மீது 43 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வீட்டிலிருந்து 2 கிமீ தள்ளி வருவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வருபவர்கள் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் இத்தகவலை நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.