வேப்பூர் அருகே இளம் பெண் கடத்தல்: தந்தை மகன் போஸ்கோ சட்டத்தில் கைது  

 


வேப்பூர் அருகிலுள்ள பூ.இராமநாதபுரத்தில்  17 வயது இளம்பெண்ணை கடத்தி சென்ற தந்தை மகன் உள்ளிட்ட இருவரை வேப்பூர் போலிசார் போஸ்கோ சட்டத்தில்  கைது செய்தனர்


கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள. பூலாம்பாடி ஊராட்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், வள்ளி தம்பதிகளின் மகள் பெயர் (மாற்றபட்டுள்ளது)  கனகா( வயது 17) , இவரும்,  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா மேட்டுகாளிங்கராய நல்லூரை சேர்ந்த முத்துசாமி மகன் முத்துகுமார் (வயது 29) என்பவரும் சுமார் 10 நாட்கள் மட்டுமே பேசி பழகி வந்துள்ளனர் 


முத்துகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளதை மறைந்து அவரது தந்தை முத்துசாமி கனகாவிடம் ஆசை வார்த்தைகளை கூறி கடந்த 16 ந் தேதி தந்தையும் மகனும் கடத்தி சென்றுள்ளனர் இது குறித்து கனகாவின் அம்மா வள்ளி வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்தி கணேஷிடம்  புகார் அளித்தார் 


புகாரின் பேரில் வேப்பூர்  இன்ஸ்பெக்டர் கவிதா  காணமல் போன கனகா, அவரை கடத்தி சென்ற தந்தை மகன் ஆகிய மூவரையும் தேடிவந்தார்


நேற்று காலை பத்துமணியளவில் வேப்பூர் அருகிலுள்ள பூலாம்பாடி ரோட்டில் நின்று கொண்டிருந்த கனகா, முத்துகுமார், முத்துசாமி ஆகிய மூவரையும் கைது செய்த இன்ஸ்பெக்டர் கவிதா,  இளம்பெண்ணை கடத்தி சென்ற தந்தை மகன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து  போஸ்கோ சட்டத்தில் கைது செய்தார்