இஸ்லாமியர்கள்  வீட்டிலிருந்து ரமலான் நோன்பை கடை பிடிக்க வேண்டும்: காயல் அப்பாஸ் வேண்டு கோள்

*இஸ்லாமியர்கள்  வீட்டிலிருந்து ரமலான் நோன்பை கடை பிடிக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வேண்டு கோள் !*


ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .


இஸ்லாமியர்களின் ஐம் பெரும் கடமையில் ஒன்றான நோன்பு வருகிற 25 ஆம் தேதி சனிக்கிழமை அன்று புனித ரமலான் நோன்பு துவங்குகிறது . துவங்கிய 
 நாள் முதல் 30 நாளுக்கும் மேலாக  காலை 4மணிக்கு மேல்  மாலை 6.30 மணி வரையிலும்  நோன்பு வைத்து உண்ணாமல் இருந்து இரவு வேளைகளில் மட்டும் அரிசி கஞ்சி, பழ வகைகள் மற்றும் சிற்றுண்டி தேனீர், வடை ,சமோசா  உள்ளிட்டவை உணவுகளை உண்பது இஸ்லாமியர்களின் பழக்கம் . என்பது குறிப்பிடதக்கது  .


தற்போது காலை 6 முதல் மதியம் 1 மணி வரையிலும்  அத்தியாவசிய பொருட்களுக்கள் வாங்குவதற்கு கடைகள் திறந்து வியாபரம் செய்ய அனுமதி வழங்கபட்டு வருகிறது .மேலும் ரமலான் மாதம் முடியும் வரையிலும் காலை 6 முதல் மாலை 6 மணி வரையிலும் பழ வகைகள் , உணவு  பண்டங்கள் , தேனீர் , சிற்றுன்டி கடைகள் திறக்க சிறப்பு அனுமதி வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது  .


 எனவே : கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய , மாநில அரசுகள் மே 3 ஆம் தேதி வரையிலும் ஊரடங்கும் உத்தரவு அமல் படுத்தி உள்ளது . நோன்பு வரும் இந்த நிலையில் ஊரடங்கும் உத்தரவுக்கு மதிப்பளித்து அரசுக்கு முழு ஓத்துழைப்பு வழங்க வகையில் இஸ்லாமியர்கள் அணைவரும் வீட்டிலிருந்து நோன்பை கடை பிடிக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம் . அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்  .