70 தூய்மை பணியாளர் களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: பரணி சங்கரலிங்கம் வழங்கினார்

நெல்லை வண்ணார்பேட்டையில் 70 தூய்மை   பணியாளர்களுக்கு முக கவசம்,பிரியாணி,குளிர்பானம், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.இதில் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி பொட்டலம்,முக கவசம், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானம், ஆகியவற்றை வழங்கினார்.


அப்போது 9வது வார்டு செயலாளரும் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளருமான வண்ணை கணேசன், தச்சநல்லூர் பகுதி கழக துணைச் செயலாளர் கண்டிகைபேரி முத்து, 3வது வட்ட கழக செயலாளர் வேல்முருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வக்கீல் மந்திரமூர்த்தி, 9- வட்ட பிரதிநிதி பிரமநாயகம்,பரமசிவன் மாரிமுத்து, பரணிகுமார், மீனாட்சிபுரம் பால்வாடி பள்ளி தாளாளர் ரீனா துரை, மாநகராட்சி தூய்மை  பணியாளர்களின் மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.