பவானி சித்தோடு பகுதியில் தங்கியிருக்கும் தொழிலார்களை நேரில் சென்று டி எஸ்.பி. சேகர் ஆய்வுதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

பவானி சித்தோடு பகுதியில் இயங்கிவரும் நிறுவனத்தில் வெளிமாநில தொழிலாளிகள் தங்கியுள்ளனர். இவர்கள் தற்போது 144 தடை உத்தரவு உள்ளதால் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல இயலவில்லை. பணிபுரியும் இடத்தில் தங்கியுள்ளனர் இவர்களை பவானி சரக மாவட்ட துணை கண்காணிப்பாளர் சேகர், சித்தோடு காவல் ஆய்வாளர் கதிர்வேல் ஆகியோர் அவர்களை சந்தித்து அவர்களுக்கு தினமும் உணவு சரிவர வழங்கப்படுகின்றதா, அவர்களுக்க சளி காய்ச்சல் உள்ளதா என்று கேட்டு அறிந்தனர்.முக கவசம் அணிய வேண்டும் என்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.