ராட்சத இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட காசிபாளையம்(கோபி ) பேரூராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பின் தொடர்ச்சியாக ராட்சத கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தெளிக்கபட்டதை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.


 தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆதரவற்றோருக்கும் உணவு தயாரிப்பதையும் பார்வையிட்டார். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், செயல் அலுவலர் ஏ. ரமேஷ் குமார், முன்னாள் எம். எல். ஏ. கந்தசாமி,ஒன்றிய செயலாளர் மனோகரன், ஆசிரியர் வேலுசாமி, முன்னாள் சேர்மன் மணி(எ )சந்திரசேகர்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.