கோபி என் ஆர் எஸ் தங்கம் கேட்டரிங் சார்பில் ஏழை எளியோர்க்கு இருவேளை உனவு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மக்கள் ஊரடங்கில் முடங்கி இருக்கிறது. இந்த நிலையில்கோபி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பொம்மநாயக்கன் பாளையம்,  ஒத்தக்குதிரை,  பொலவக்காளிபாளையம், நாதிபாளையம்,  மொடச்சூர்,கலிங்கியம்,  நாகர்பாளையம் போன்ற பகுதிகளில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர்,  முதியோர்,  மாற்றுத்திறனாளிகளுக்கு கோபி என் ஆர் எஸ் தங்கம் கேட்டரிங் சார்பில் உரிமையாளர்களான சரவணராஜ் குமார், இந்திராணி ஆகியோர் ஊரடங்கு அமல் படுத்திய முதல் நாள் முதல் இன்று வரை தொடர்ந்து  தனது சொந்த செலவில்  காலை மற்றும் மதியம் ஆகிய இருவேளையும்   ஐயாயிரத்துக்கு மேல் உணவு பொட்டலங்களை  வழங்கியுள்ளனர்.


மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரு நாட்களுக்கும் தொடர்ந்து உணவு வழங்கி சேவையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடன்  வசந்தகுமார் உள்ளார்.