ஸ்டாக்குகளை பொதுமக்கள் தலையில் கட்டி காசு பார்க்கும் அயோக்கியத்தனம்: திருப்பூர் மளிகைக்கடைகாரரின் ஆணவம்

ஊரடங்கு நிலையில் தற்போது அனைத்து தொழில்களும் முடக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மட்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்காக மளிகைக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.


(படம்: மாஸ்க் போடாமல் கல்லாவில் உட்கார்ந்திருக்கும் மளிகைக்கடை உரிமையாளர்)


--------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஆனால், மளிகைக்கடைக்காரர்கள் எரிகிற தீயில் பிடுங்கியது மிச்சம் என்ற கதையாக அனைத்துப் பொருட்களையுமே விலை ஏற்றி விற்பனை செய்கிறார்கள். மேலும் விற்காத பிராண்டு பொருட்களை, பழைய ஸ்டாக்குகளை எல்லாம் பொதுமக்கள் தலையில் கட்டி காசு பார்க்கும் பிணந்தின்னி வேலை செய்வது தான் வேதனையான விஷயம்.


இந்த உலகறிந்த பித்தலாட்டத்துக்கு எடுத்துக்காட்டாக திருப்பூரில் உள்ள தாராபுரம் ரோடு, அரண்மனைப்புதூர் பஸ் ஸ்டாப்பில் உள்ள செந்தில் மளிகைக்கடை செயல்படுகிறது. 


கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் துளிகூட மரியாதையாக பேசுவதில்லை. கேட்கும் பொருட்கள் இல்லை என்று கூறி டிமாண்ட் செய்து அடுத்தடுத்த நாட்களில் வரவைத்து அதே பொருளை விலை ஏற்றி விற்கிறார்கள்.



இந்த கடைக்கு சென்று வந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறியது:


செந்தில் மளிகைக்கடைக்கு  பொருட்கள் வாங்க யார் சென்றாலும், வேண்டுமென்றே பொருட்களை தர மறுக்கிறார்கள். நாம் கேட்கும் அளவில் 25 சதவீதம் தான் பொருட்களை கொடுக்கிறார்கள். மீதியை நாளைக்கு வந்து வாங்கிக்க... என்று ஒருமையில் தான் பேசுகிறார்கள். இன்று வேண்டும் என்று கேட்டால் தர மறுக்கிறார்கள். 


நான் இந்த கடையில் ஒரு கிலோ சர்க்கரை, நரசுஸ் காபித்தூள் கேட்டேன். ஆனால் நரசுஸ் காபி கிடையாது, மூர்த்தி காபி வேண்டுமானால் தருகிறேன் என்றார். நான் மூர்த்தி காபி வேண்டாம் என்று சொல்லி விட்டேன். 


பிறகு ஊரடங்கில், தெருநாய்களுக்கு போடுவதற்காக பிஸ்கெட்  வாங்குவது என் வழக்கம். அதற்கு பிஸ்கெட் வாங்கிய போது நீல நிற சன்பீஸ்ட் பிஸ்கெட் கேட்டேன். ஆனால் அதை தர மறுத்து  சிவப்பு நிற பிஸ்கெட் பாக்கெட் தரமுடியும் என்கிறார்கள். சிவப்பு நிற பாக்கெட் வேண்டாம் என்று கூறினேன்


உடனே உன்னுடைய வியாபாரமே வேண்டாம். சர்க்கரையை கொடு, என்று வாங்கி வைத்துக் கொண்டு வெளியே போ.. என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் கொடுக்கிற தரமற்ற பொருட்களை வாங்கவில்லை என்றால் எதுவும் தரமுடியாது என விரட்டுவது எப்படி சரியாகும்? 


நான் அவரிடைம்,  கலெக்டர் அலுவகத்தில் நீங்கள் இப்படி நடந்து கொண்டது பற்றி புகார் கூறுவேன் என்று கூறியதற்கு, யாரிடம் வேண்டுமானாலும் சொல் நான் பார்க்கிறேன் என்று கூறுகிறார்கள்.


மேலும் கடையில் பொருள் வழங்குபவர், பணம்பெறுபவர் என இருவருமே மாஸ்க் அணிவதில்லை. கடை முன்புறம் கைகழுவ தண்ணீர் வைப்பதும் இல்லை. வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நிற்க வட்டமிட்டு வைப்பதும் இல்லை. அதே நேரம் சமூக இடைவெளியை பின்பற்ற சொல்லி அறிவுறுத்துவதும் இல்லை. கூட்டமாக நிற்க வைத்து பொருட்களை வழங்குகிறார்கள்.  நோய்க்கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவது இல்லை. 


இப்படி வேண்டுமென்றே ஆணவத்தில் திரிகிறார்கள். ஊரடங்கு காலத்தில் மனிதநேயத்துடன் செயல்படுவார்கள் என்று பார்த்தால் மளிகைக்கடைக்காரர்கள் ஆணவத்திலும், பணப்பித்து பிடித்தும் அலைகிறார்கள்.


பொருட்களை பதுக்கி வைத்து விற்பதும், பொருட்களை வைத்துக் கொண்டே இல்லை என்று கூறி அடுத்த நாட்களில் விலையேற்றி வைப்பதையும் தொடர்ச்சியாக செய்கிறார்கள். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இது போன்ற கடைக்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறினார். 


 


 


Previous Post Next Post