பாளையங்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி

 


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை  கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சுகாதாரத்துறை மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இன்று 18-4-2020 (சனிக்கிழமை) திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் சொந்த செலவில்   திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல பகுதியில்  32-வது வார்டு ஏரியாவில் வீடு வீடாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த   பணி தொடர்ந்து  நடைபெற உள்ளது.


கிருமிநாசினி தெளிக்கும் பணியின்போது நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உடன் சென்றார். பாளை மாநகராட்சி மண்டல சுகாதார ஆய்வாளர் இளங்கோ உடன் இருந்தார்.