கூகலூர் பேருராட்சியில் வாழைத்தார் ஏல சிறப்பு விற்பனை; அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் துவக்கி வைத்தார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூர் பேருராட்சி  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் விவசாயிகளின் நலன் கருதி கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் வாழைத்தார் ஏல சிறப்பு விற்பனையை  தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் துவக்கி வைத்தார். அருகில் அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் இ. எம். ஆர்.ராஜாகிருஷ்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ்,மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியம், துணை பதிவாளர் கந்தராஜ் , சொசைட்டி தலைவர்கள் பி.கே.காளியப்பன், சீனிவாசன், கந்தசாமி, கே.எஸ்.பழனிச்சாமி, இயக்குநர் டி.சி.சின்னச்சாமி, கூகலூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு)ஏ. ரமேஷ்குமார், மேலாளர் சாகுல் ஹமீத்,சங்க செயலாளர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.