திருப்பூர் அருகே கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிப்பு

திருப்பூர் பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவுவதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் திருப்பூர் அருகே உள்ள சில பகுதிகளை கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு.


திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒருவர் என இருந்த நிலையில் டெல்லி சென்று வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யபபட்டதை அடுத்து கொரோனா பாதிப்பு 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 1114 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 61 பேருக்கு தொற்று இல்லை என கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு உள்ள மூன்று பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து திருப்பூரிலிருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள், குடும்பத்தினர்கள் என 69 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளனர். இதனையடுத்து திருப்பூர் அருகேயுள்ள மங்கலம், தேவராம்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலமாக வருவாய்த்துறையினர் குறியீடு செய்துள்ளனர். கட்டுபாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மூன்று கி.மீ சுற்றளவுக்கு உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தபட்டுள்ளனர்.