உணவின்றி தவித்த தொழிலாளர்கள்: ஓடோடி சென்று உதவிய நெல்லை மாவட்ட நிர்வாகம்-பொதுமக்கள் பாராட்டு

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் விலக்கு பகுதியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 30 குடும்பத்தினர் சாலையோரத்தில் குடிசை அமைத்து தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.


கடந்த 15 நாட்களாக வேலை இல்லாமல் தவித்து வரும் இவர்கள் உணவு இன்றி தவித்து வருகின்றனர். இதில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் கூட கொடுக்க பணம் இல்லை என அவர்கள் கூறுவது வேதனை அளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.


இதுகுறித்த செய்தி, தமிழ் அஞ்சல் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பகிரப்பட்டது. இதுகுறித்த தகவல் தெரிந்த நெல்லை மாநகர காவல் ஆணையர் சரவணன் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளித்தார். 


தகவலின் பேரில், கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உணவின்றி தவித்த அந்த குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு மளிகை பொருட்களை வழங்கினர். 


உதவி கேட்டதும் ஓடோடி சென்று உதவிய மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 


எழுந்துள்ளது.


Previous Post Next Post