சிறுபாக்கம் ஊராட்சியில் கிருமிநாசினி அடிக்கும் பணி கணேசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுப்பாக்கம் ஊராட்சியில் வேகமாக பரவி வரும் கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாயிலாக தெருத்தெருவாக கிருமிநாசினி அடிக்கும் பணியினை திமுக மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன்  திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர்

தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

 

தொடர்ந்துகொரோனா நோயிலிருந்து தற்காத்து தனிமையில் இருந்து வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கும்பிட்டு உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு முககவசம் வழங்கினார். மங்களூர் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் கே என் டி சங்கர் ,ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சின்னசாமி, ஒன்றிய திமுக செயலாளர் செங்குட்டுவன் ,கவுன்சிலர்கள் சுகுணா சங்கர் ,பாப்பாத்தி ராமலிங்கம் ,துணைத் தலைவர் மணிகண்டன் ,மங்களூர் ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், மனோகரன், மருதமுத்து, ராமதாஸ், அன்பு, பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.