செம்பாக்கம், செங்கல்பட்டு, மதுராந்தகம் நகரங்களுக்கு சீல்: கலெக்டர் ஜான் லூயிஸ் பேட்டி


செங்கல்பட்டு மாவட்டத்தில் செம்பாக்கம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய நகரங்கள் நாளை முதல் முழுவதும் சீல் வைப்பு, மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் செம்பாக்கத்தில் பல்வேறு துறை  அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு


கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் நகராட்சியில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் ஏற்கனவே அந்த தெருவை சுற்றி 10 இடங்களில் தடுப்புகளை வைத்து இரவு பகலாக போலீசார் பாதுகாத்து வருகிறார்கள், இந்த நிலையில் செம்பாக்கம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய நகரங்களில் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மற்ற நபர்களுக்கு பரவாமல் தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தை கட்டுபடுத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் உத்திரவிட்ட நிலையில் இன்று மாலை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சி பகுதியில்  வருவாய்,உள்ளாட்சி, சுகாதாரம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு செய்தார், மேலும் வாரத்திற்கு ஒருமுறை வீடுக்கு மளிகை பொருட்களும், இரண்டுமுறை காய்கறிகளும் வந்து சேரும் விதமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொண்டார்,


அதுபோல் இருவழிச்சாலையாக இருந்த கிழக்கு தாம்பரம் வேளச்சேரி சாலையை ஒருவழிச்சாலையாக  தடுப்புகளை அமைத்த போலீசார்  வாகனங்களை கட்டுபடுத்தி படுத்திவருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


 


Previous Post Next Post