ஈஸ்டர் பண்டிகையை வீட்டில் கொண்டாடிய கிறிஸ்துவர்கள்

 


இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த இந்நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சாம்பல் புதன்கிழமை ஈஸ்டர் பண்டிகையை தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தினமும் மாமிச உணவுகளை தவிர்த்து, உபவாசமிருந்து ஆராதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த ஞாயிறன்று குருத்தோலை பவனி ரத்து செய்யப்பட்டது. அதேபோல் பெரிய வெள்ளி ஆராதனையும் ஒரு சில பாதிரியார்கள் மட்டும் ஆலயத்திற்கு வந்திருந்து நடத்தினர். 


இன்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஆலயங்களில் பாதிரியார்கள் மட்டும் வந்திருந்து ஆராதனை செய்தனர். இதனை கிறிஸ்தவர்கள் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் பார்த்தனர். பின்னர் அவர்களும் குடும்பத்துடன் வீட்டிலேயே ஆராதனை செய்தனர். ஒரு சிலர் மட்டும் தனியாக ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post