கொரோனா பரவுவதற்கு இஸ்லாமியர்களே  காரணம் என்ற வதந்தி பரப்புபவர்கள்  மீது நடவடிக்கை எடுங்க: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

கொரோனா  வைரஸ் பரவுவதற்கு இஸ்லாமியர்களே காரணம் என வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கோரிக்கை


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது இதில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் என்பது பற்றாக்குறையாக உள்ளதாகவும் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் பட்டினிச்சாவு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால்  மத்திய மாநில அரசுகள் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் அதேபோல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு இஸ்லாமியர்களே  காரணம் என்ற வதந்தி பரப்புபவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.